தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் தோன்றிய ஆழ்ந்த அழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இன்று இரவு திருவாரூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.