'' வலிமை'' பட தயாரிப்பாளர் டுவீட்...#ValimaiFromJan13 டுவிட்டரில் டிரெண்டிங்

செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:04 IST)
அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை வரும் 13 ஆம் தேதி முதல் பெறுங்கள் என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்களால் தீவிரமாக எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை பொங்கலுக்கு வெளியாவதாக போனிகபூர் அறிவித்திருந்தார். தற்போது ஒமிக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி உள்ளது. நாட்டின் பிற மாநிலங்களிலும் பல்வேறு தடைகள் இருப்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படம் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் இப்படத்தின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெறுங்க்கள் என எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..#AjithKumar #HVinoth

Experience the POWER OF #VALIMAI, in Tamil, Telugu and Hindi. Releasing Worldwide on 13th January 2022.#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #ValimaiFromPongal #ValimaiFromJan13 pic.twitter.com/crMZfBTZFH

— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்