அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

vinoth

புதன், 9 ஏப்ரல் 2025 (18:07 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வி எஃப் எக்ஸ் பணிகள், அல்லு அர்ஜுன் & அட்லி சம்பளம் ஆகியவற்றின் காரணமாக படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்