தமிழக அரசின் முடிவால் கலக்கத்தில் வலிமை தயாரிப்பாளர்கள்!

சனி, 1 ஜனவரி 2022 (10:24 IST)
புத்தாண்டு பிறந்துள்ளதை அடுத்து வலிமை படத்தின் ரிலீஸுக்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள மிகப்பெரிய படமாக வலிமை உள்ளது. இந்த படத்தை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கி உள்ளனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தமிழக அரசு ஜனவரி 10 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடு ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய விநியோகஸ்தர்களும், கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்த திரையரங்க உரிமையாளர்களும் இப்போது கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்