இந்தப் படத்தில் சுவாமிநாதன் எனும் கேரக்டரில் தோன்றிய ஒரு துணை நடிகர் குறித்து தற்போது பரவும் செய்தி, ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கமல்ஹாசனின் அறை தோழனாக, மெடிக்கல் காலேஜில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில், ரெடிட் தளத்தில் ஒரு பயனர், “இந்த நடிகர் இப்போது எங்கு இருக்கிறார்?” என கேள்வி எழுப்ப, ஒருவர் பதிலளிக்கையில், “இவர் என் சகோதரரின் நண்பர். அவருடைய பெயர் ரத்தின சபாபதி. இவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.
இது பற்றி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தும் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் ரசிகர்களிடையே துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.