அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி நாளை உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
அந்த டிரைலரில் அஜித்தின் அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை நினைவூட்டும் வசனம் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அஜித்தின் இளமையானத் தோற்றமும் டிரைலரில் இடம்பெற்றிருந்தது. அது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ரிலீஸாகிறது.