பிப்ரவரி 22ம் தேதி முதல் 'கண்ணே கலைமானே'

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (10:26 IST)
தர்மதுரை' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி  இயக்கி உள்ள  `கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
உதயநிதி ஸ்டாலின், தமன்னா சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  உதயநிதி கிராமத்து நாயகனாக  நடித்துள்ளார். அண்மையில் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இப்போது படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பினை உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்  வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 22ம் தேதி கண்ணே கலைமானே படம் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்