அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை சீனுராமசாமி இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் இருந்த சீனுராமசாமி, விஜய்சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மாமனிதன் என்ற படம் மீண்டும் இணைந்துள்ளது.
இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கிறார்கள். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.