எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள கண்ணே கலைமானே முதல் சிங்கிள்! ஏன் தெரியுமா?

திங்கள், 24 டிசம்பர் 2018 (17:11 IST)
கிராமத்து படங்களை மண்வாசனையுடன் இயக்குவதில் தனித்துவம் மிக்கவர் சீனு ராமசாமி. அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து 'கண்ணே கலைமானே' படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார்.



கண்ணே கலைமானே  படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். வைரமுத்து பாடல், யுவன் சங்கர் ராஜா இசை, சீனு ராமசாமி படம்  என்பதால், முதல் சிங்கிள் டிராக் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்