சென்னையில் தொடங்கும் ராம் & நிவின் பாலி திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாம்.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் முனைப்பில் உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றியே நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடக்க உள்ளதாம். அதற்கான அரங்குகள் அமைக்கும் பணி இப்போது நடந்து வருகிறதாம். செப்டம்பர் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடக்க உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்