இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதில், வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடலுக்கு ரெடியாகுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவரது தனது டுவிட்டை இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் விக்னேஷ் சிவனுகு டேக் செய்துள்ளார், அதனால் இப்பாடலை விக்னேஷ் எழுதியிருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.