ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

vinoth

திங்கள், 31 மார்ச் 2025 (12:54 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

இதையடுத்து அவர் நடிப்பில் நீண்ட காலமாக ‘டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டை தாண்டி அதிக செலவு செய்து உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் “படம் நன்றாக வந்திருக்கிறது. நல்ல ரிலீஸ் தேதியாகப் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்” என அறிவுரை வழங்கியுள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்