கொரோனா குமாரில் விஜய் சேதுபதியின் குரல் மட்டும்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:58 IST)
நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குனர் கோகுலும் நெருக்கமான நண்பர்கள் என்பது திரையுலகினர் அறிந்தது.

விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் அந்த படத்தின் டைட்டில்தான். ’கொரோனா குமார்’. என்று அறிவிக்கப்பட்ட  படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை விஜய் சேதுபதியே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் சந்தானம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இயக்குனர் கோகுல் சிம்புவை வைத்து சத்தம் இல்லாமல் அந்த படத்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாகப் படக்குழு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பை இப்போது ஐசரி கணேஷ் கைப்பற்றியுள்ளாராம். படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாம். இந்நிலையில்  இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தின் நரேட்டராக தனது குரலை மட்டும் கொடுக்க உள்ளாராம். இயக்குனர் கோகுலின் நட்பிற்காக விஜய் சேதுபதி இந்த முடிவுக்கு ஒத்துகொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்