ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் நேற்று ரிலீஸானது. ஆனால் ரிலீஸாவதற்கு முன்பே இந்த படத்தின் HD பிரிண்ட் முதல் நாளே இணையத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படத்தின் ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதன் காரணமாக முன்பதிவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் முதல் நாளில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 26 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.