கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

vinoth

திங்கள், 31 மார்ச் 2025 (12:44 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஜீவாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்