டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக டிமாண்டி காலனி 2 படத்தை இயக்கினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வசூலில் கலக்கியது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கடந்த ஆண்டின் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனால் இந்த படத்தின் மூன்றாவது பாகத்தை உடனடியாகப் படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் படத்தின் ரிலீஸை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் நடித்த அருள்நிதி மட்டும் மூன்றாம் பாகத்தில் தொடர்வார் என சொல்லப்படுகிறது.