சூப்பர் ஸ்டார் நடிகரின் மனைவி மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (16:19 IST)
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஜான் ட்ரவோல்டாவின் மனைவியான கெல்லி மார்பக புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார்.

ஹாலிவுட்டில் 70களில் இளம் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ஜான் ட்ரவோல்டா. பின்னர் பல்ப் பிக்‌ஷன், பேஸ் ஆப் மற்றும் ஸ்வார்ட் பிஷ் போன்ற உலகம் முழுவதும் அறியப்பட்ட படங்களில் நடித்தார். இவரது மனைவி கெல்லி. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளார். இதை ஜான் ட்ராவோல்டாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் ’பலரது அன்பால் அவர் புற்றுநோயை எதிர்த்து துணிச்சலாக போராடினார். தாயை இழந்துள்ள என்னுடைய குழந்தைகளுடன் சில காலம் இருக்கப்போகிறேன். இன்னும் கொஞ்ச காலத்துக்கு என்னிடம் இருந்து எந்த தகவலும் வராது என்பதால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்