இத பத்தியும் பேசுங்க... எடப்பாடியாருக்கு அட்வைஸ் கொடுத்த ஸ்டாலின்!

செவ்வாய், 14 ஜூலை 2020 (11:32 IST)
அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த சில விஷயங்களையும் ஆலோசிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரியுள்ளார்.
 
தமிழகத்தில்‌ ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன்‌ கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகள்‌ குறித்து மருத்துவ நிபுணர்கள்‌, மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ அரசு அதிகாரிகளுடன்‌ அவ்வப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இந்த ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சென்னையில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில்‌ கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தின் பிற பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ இன்று மாலை 5 மணியளவில்‌ நடைபெற உள்ளது. 
 
இந்த கூட்டத்தில்‌ தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ ஊரடங்கு தளர்வுகள்‌ குறித்து விரிவாக விவாதிக்கப்படும்‌ என்று தெரிகிறது. மேலும் தமிழகத்தில்‌ புதியதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள்‌, அதுகுறித்து பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள்‌ குறித்தும் ஆலோசனை நடைபெறும்‌ என கூறப்படுகிறது. 
 
இதனிடையே அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் பின்வரும் சில விஷயங்களையும் ஆலோசிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரியுள்ளார், அவர் கூறிய விஷயங்கள் பின்வருமாறு... 
 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்குவது, 
கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள அனைத்து நகைக்கடன்களையும் ரத்து செய்வது, 
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது
கொரோனா காலத்திற்கு வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிப்பது, 
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை அளிப்பது, 
மாணவர்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்வது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்