இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதானா?... பண்டிகை விடுமுறையைக் குறிவைக்கும் படக்குழு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:29 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுதான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது வாரிசு படம் ரிலிஸுக்கு தயாராகி வருவதால், ரிலீஸ் வரைக்கும் ஷங்கர் – ராம்சரண் படத்துக்கு பிரேக் விட்டுள்ளாராம் தில் ராஜு. இதனால் ஷங்கர் விருவிருப்பாக இந்தியன் 2 படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாக அதிகவாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் இமாலய வெற்றியால் கமல் படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்