தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.
அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி முகநூலில் பதிவுகளை இட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தாய் அங்கம்மாள் மற்றும் மூத்த பாடகர் சுசீலா ஆகியோருக்கு உடல் நலமில்லாதது குறித்து அவர் இட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரமுத்துவின் முகநூல் பதிவு
இருபெரும் தாயர்க்கு
உடல் நலமில்லை
ஒருவர்
எனக்குப் பாலூட்டிய தாய்
அங்கம்மாள் ராமசாமி
இன்னொருவர்
எனக்குப் பாட்டூட்டிய தாய்
பி.சுசீலா
நாட்டார் தமிழைக்
கற்பித்தவர் பெற்றதாய்;
பாட்டார் தமிழைக்
கற்பித்தவர் உற்றதாய்
தாங்குதுணை இல்லாமல்
தன்னியக்கம் இல்லை
இருவர்க்கும்
சற்றொப்பச் சமவயதுகொண்ட
தாய்மார்கள்
இருவர்க்குமே வாழ்வு
சர்க்கரையால் கசக்கிறது
நான் பாசத்தோடு படைக்கும்
சத்துமாவுக் கஞ்சிதான்
இருவர்க்கும் ஆகாரம்
இருவரையும்
மாறிமாறி நலம்கேட்கிறேன்
அந்த நான்கு கரங்களையும்
பற்றும்பொழுது
நடுங்குகின்றன
என்னிரு கரங்களும்
இருபெரும் தாயரும்
நலமுற வேண்டும்;
நெடுங்காலம்
நீடு வாழவேண்டும்
"பறவை பறந்துசெல்ல
விடுவேனா - அந்தப்
பரம்பொருள் வந்தாலும் தருவேனா?
உன்னை அழைத்துச்செல்ல
எண்ணும் தலைவனிடம்
என்னையே நான்தர மறுப்பேனா?"
ஒருவர் பாடிய பாடல்
இருவர்க்கும் காணிக்கை
அன்னையர் இருவரும்
ஆண்டுபல நீண்டுவாழ
வேண்டுமென்று
வேண்டுகின்றேன்
யாண்டுமுள்ள நண்பர்களை