கமல் படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்த இயக்குனர் பா ரஞ்சித்!

திங்கள், 30 ஜனவரி 2023 (08:19 IST)
பா ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், இந்தியன் 2, மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளாகவே கமல் – பா ரஞ்சித் இருவரும் இணையும் படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதை இருவருமே உறுதி செய்துள்ளனர்.

இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், கமல் இந்தியன் 2 திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போது பா ரஞ்சித் தெரிவித்துள்ள தகவலின் படி “ரெண்டு விதமான கதைக்களன்கள் உள்ளன. இப்போதைக்கு தங்கலான் படத்தில் மட்டுமே என் கவனம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்