விவசாயிகளிடம் கருத்து கேட்ட யோகேந்திரராவ் கைது: ஸ்டாலின், கமல் கண்டனம்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (23:09 IST)
திருவண்ணாமலையில்  விவசாயிகளிடம்  கருத்து கேட்க வந்த அகில இந்திய விவசாய சங்கத்தலைவர் யோகேந்திர யாதவை,போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்ததை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், 'போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்க நினைக்கும் தமிழக அரசு இவற்றுக்கு எல்லாம் விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்த வீடியோவில் கூறியதாவது: 'வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து நமது விவசாயிகளிடம் கருத்து கேட்ட யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்த அதிகாரம் அரசுக்கு எப்படி வந்தது? சட்டத்தை காரணம் காட்டி இவ்வாறு குரல்கள் எழாமல் செய்யும் வேலை சர்வாதிகாரம் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்