பிக்பாஸ் இல்லத்தில் நிகழ்ந்த பெரும் துயரம்!

சனி, 8 செப்டம்பர் 2018 (17:36 IST)
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் போட்டியாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.


இந்த பிக் பாஸ் வீடானது சென்னை பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல தொழிலாளர்கள்  தங்கி பராமரிப்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இங்கு குளிர்சாதன பராமரிப்பு பணிகளை கவனித்து வந்த குணசேகரன் (30) நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக இரண்டாவது மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மாடியிலிந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தனர்.

உடனடியா சக தொழிலாளிகள் குணசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து குணசேகரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து நசரப்பேட்டை காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்