அழகிரி பேரணி குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கவே இந்த சிபிஐ ரைய்டு: தம்பிதுரை

சனி, 8 செப்டம்பர் 2018 (16:02 IST)
அழகிரியில் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக்கூடாது என்பதற்காகவே இந்த சிபிஐ சோதனை நடைபெற்றது என்று அதிமுக அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் கூறியுள்ளார்.

 
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பலரும் ஆளும் ஆரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த சிபிஐ சோதனை குறித்து துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-
 
அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாட்டை முடக்கவே இவ்வாறு சதி நடைபெறுகிறது. திமுகவிற்கு பாஜகவிற்கு இடையே கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணி அவர்களிடையேதான்.
 
அழகிரி பேரணி குறித்த செய்திகள் வெளிவரக்கூடாது என்பதற்காவே ஸ்டாலினுக்கு உதவவே மத்திய அரசு சிபிஐ அதிகாரிகளை கொண்டு அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தியது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்