பெரியார் சிலை சேதம்; இந்து முன்னணி ஆதரவாளர்கள் கைது!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (09:04 IST)
கோவையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் இருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது சிலையை சேதப்படுத்தியதாக இந்து முன்னணி ஆதரவாளரான அருண் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்