இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran

புதன், 9 ஏப்ரல் 2025 (17:39 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று காலை  திடீரென விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்தது. இதனடிப்படையில், ஒரு கிராம் ரூ.8,290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்நிலையில்இந்த  விலை உயர்வு கூட போதாதென்று, பிற்பகலில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை மேலேறியுள்ளது. இன்று மாலை ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்ததில், தற்போது ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு சவரன் ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
அதாவது, ஒரே நாளில் சவரன் தங்கம் ஒரு சவரனுக்கு  ரூ.1,480 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்