ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

Mahendran

புதன், 9 ஏப்ரல் 2025 (17:42 IST)
இரண்டாம் உலகப் போர் நிறைவுக்கு பின்னர், ஹிட்லரின்  ஜெர்மனியை சோவியத் யூனியன் தோற்கடித்த 80 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, மே 9ஆம் தேதி ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் ‘வெற்றி தின’ அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அரசு அழைப்பு அளித்துள்ளது.
 
1945 மே 9ஆம் நாளன்று, ஜெர்மனி சோவியத் யூனியனிடம் சரணடைந்ததையே நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ரஷியாவில் இந்நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது ரஷியாவின் முக்கியமான தேசிய விழாக்களில் ஒன்றாகும்.
 
இந்த ஆண்டுக்கான அணிவகுப்புக்காக, இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவோடு மட்டுமல்லாது, பல நாட்டு தலைவர்களுக்கும் ரஷியா அழைப்பு அனுப்பியுள்ளது.
 
பிரதமர் மோடி இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில் தற்போதைய அழைப்பையும் ஏற்று அவர் ரஷ்யா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்