''வில்லன்'' கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித்குமார்

செவ்வாய், 11 ஜனவரி 2022 (00:57 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் கொரொனா பரவலால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்குமாரின் 61 வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை போனிகபூர் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் அஜித்குமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்