ரேசன் கடை பணியாளர்கள் போராட்டம்! பொங்கல் பை வழங்குவதில் பாதிப்பா?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:53 IST)
தமிழக ரேசன் கடை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பொங்கல் பை வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரேசன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பொங்கலுக்காக அரசு வழங்கும் பொங்கல் பை தொகுப்புகள் ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொருட்கள் சில தரமற்றவையாக உள்ளதாகவும், தொகுப்பு பைகள் குறைந்த அளவிலேயே அனுப்பப்பட்டுள்ளதாகவும் புகார்கள் உள்ளன.

இந்நிலையில் நாளை 12ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் நாளை ரேசனில் பொங்கல் பை வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் காலையில் பொங்கல் பைகளை விநியோகித்துவிட்டு மாலைக்கு மேல் போராட்டம் நடத்த உள்ளதால் பொங்கல் பை விநியோகத்தில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்