வீட்டிற்கே வந்து ஆயிரம் ரூபாய் வழங்குவார்கள் – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (14:01 IST)
தமிழக மக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் சிக்கியுள்ள வெளி மாநில மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிமாநில மக்களுக்கு நல உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி நேரில் சென்று வழங்கியதுடன், ஆய்வு பணிகளையும் மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசு ஊழியர்கள் வீடுகளில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அதற்காக அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, வீடுகளுக்கு டோக்கன் அளிக்க வரும்போதே நிவாரண பணம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். ரேசன் பொருட்கள் இந்த மாத இறுதி வரை வழங்கப்படும் என்பதால் மக்கள் எப்போது வேண்டுமானாலும் டோக்கன் கொடுத்து ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்