30% மானியம், மேலும் பல... எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்புகள்!!
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (09:55 IST)
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் எனவும் இதோடு பல சலுகை அறிவிப்புகளையும் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு...
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கப்பட்டால் சலுகை.
மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலட்தனமாக 30% மானியம் வழங்கப்படும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் மூலதனக் கடனிற்கான வட்டியில் 6% மானியமாக வழங்கப்படும்.
மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100% முத்திரை தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்.
அடுத்த 4 மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ பொருட்களில் 50% தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும்.
குறுகியம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிட்கோ மூலம் நிலம், கூடாரங்கள் வழங்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகை பொருந்தும்.