பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அரசு வேலை, 4 கோடி ரூபாய் பணம் மற்றும் வீடு ஆகிய மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் 4 கோடி ரூபாய் பணத்தை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பிரபல இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுடன், ஹரியானா மாநில தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு வெள்ளி பதக்கம் பெற்றதன் கௌரவம் அளிக்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு விதிகளின் கீழ், 4 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு, சொந்த வீடு அல்லது குரூப் ஏ அரசு வேலை ஆகிய மூன்றில் ஒன்று தேர்ந்தெடுக்குமாறு வினேஷ் போகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் வினேஷ் போக ரூபாய் 4 கோடியை தேர்வு செய்துள்ளார்.
இதனை அடுத்து, இந்த ரொக்கப்பணம் அவருக்கு விரைவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் நல்ல சம்பளம் தரும் அரசு வேலையை விட்டு விட்டு, அவர் 4 கோடி ரூபாயை ஏன் தேர்வு செய்தார் என்பது பலருக்கு பெரும் குழப்பமாக உள்ளது.