ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: நெல்லையில் ராகுல் காந்தி அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:39 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நெல்லையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ’தமிழ்நாட்டில் உள்ள மீனவர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மோடி நிதிதர மறுத்துவிட்டார் என்றும் தெரிவித்தார் ’

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தர திட்டமிட்டுள்ளதாகவும் தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்யப் போவதாகவும் அவர் கூறினார்

மேலும் வறுமையில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

மீனவர்களை பிரதமர் மோடி முழுமையாக மறந்து விட்டார் என்றும் ஆனால் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களின் படகுக்கு டீசல் ,காப்பீடு, கடன் அட்டை ஆகியவை வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்