70 கோடி மக்களிடம் உள்ள பணம் 22 பெரும் பணக்காரர்களிடம் உள்ளது: ராகுல் காந்தி

Mahendran

வியாழன், 11 ஏப்ரல் 2024 (19:40 IST)
நாட்டில் 70 கோடி மக்களிடம் உள்ள மொத்த பணம் வெறும் இருபது பெரும் பணக்காரர்களிடம் உள்ளது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவர் பாஜக மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம் வெறும் 22 பணக்காரர்களிடம் இருக்கிறது என்று தெரிவித்தார்

 குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்று நமது விவசாயிகள் கேட்கிறார்கள், வேலை வாய்ப்பு வேண்டும் என்று நமது இளைஞர்கள் கேட்கிறார்கள், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது பெண்கள் கேட்கிறார்கள்

ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்க விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதி என்கிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக பாஜக அரசை தாக்கி பேசி உள்ளார்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்