வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது என்றும் பொதுமக்களின் குரலை உயர்த்துவதுதான் ஊடகங்களின் வேலை, ஆனால், அதைச் செய்ய அவர்களின் கோடீஸ்வர உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் 70 கோடி மக்களிடம் உள்ள பணத்தின் அளவு, 22 பணக்காரர்களிடம் உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் நாட்டில் இளைஞர்கள் வேலையில்லா சுழல் நிலவுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.