இந்த நிலையில், அவருடைய மனைவியும் ஐஏஎஸ் அதிகாரி என்ற நிலையில், அவரும் தற்போது ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் பிஜு ஜனதா தள கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், அவருக்கு வலது கையாக இருந்த வி.கே. பாண்டியனே தோல்விக்குக் காரணம் என்று விமர்சனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே. பாண்டியன் அறிவித்த நிலையில், தற்போது அவருடைய மனைவி சுஜாதா கார்த்திகேயனும் ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு விலகி விட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
வி.கே. பாண்டியன் தமிழராக இருந்தாலும், சுஜாதா ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடைய நடவடிக்கைகளால் தான் நக்சல் பயமின்றி ஒடிசா மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒடிசா மாநில மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த காரணமானவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஆலோசகராக சுஜாதா பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.