வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

Prasanth Karthick

வியாழன், 3 ஏப்ரல் 2025 (14:40 IST)

ஆஸ்திரேலியாவில் மருத்துவர் பணிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் யாரும் வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகின் பெரிய தீவு நாடாக உள்ள ஆஸ்திரேலியாவின் பெரும்பான்மை பகுதிகள் மக்கள் வாழாத பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதிகளை ஒட்டியே நகரங்கள் உள்ள நிலையில் குயின்ஸ்லாந்து போன்ற பகுதிகள் மக்கள் நடமாட்டமில்லா பரப்பாகவே இருந்து வருகிறது.

 

இந்த ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிறு நகரம்தான் ஜூலியா க்ரீக். குயின்ஸ்லாந்து மாகாண பகுதியில் உள்ள இந்த நகரத்திலும் அதை சுற்றியுள்ள இஷா சிட்டி போன்ற பகுதிகளிலும் குறைவான மக்களே வாழ்ந்து வருவதுடன், முக்கிய நகரங்களுடன் பெரிய தொடர்பு இல்லாமல் நெடுந்தொலைவிற்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இவை உள்ளன,.

 

அதனேலேயே இந்த நகரங்களில் பணிபுரிய பலரும் ஆர்வம் காட்டுவதில்லையாம். அப்படியும் பணியாளர்களை ஈர்ப்பதற்காக ஜூலீயா க்ரீக் பகுதியில் மருத்துவராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ.3 கோடி சம்பளம், கார், வீடு என அனைத்து வசதிகளும் அறிவிக்கப்பட்டதாம். ஆனாலும் யாரும் அங்கு பணிபுரிய முன்வரவில்லை. இங்கிருந்து நகர்புறத்திற்கு பயணிக்கவே 7 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்