காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்றும் அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது என்றும் ஜெபி நட்டா குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார் என்று அவர் தெரிவித்தார்.