ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண்? பரபரப்பு தகவல்..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (12:25 IST)
ஆந்திர மாநிலத்தில் நாளை முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவருடைய கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்,  பவன் கல்யாண் ஜனசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 
 
இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும் ஜனசேனா 21 இடங்களிலும் பாஜக எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் ஜனசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஜனசேனா கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டாவது பெரிய கட்சி என்பதால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியும் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்க உள்ள நிலையில் பவன் கல்யாண் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்கப்படலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்