சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் ரூ.572 கோடியாக உயர்வு..!

Mahendran

வெள்ளி, 7 ஜூன் 2024 (16:06 IST)
ஆந்திர முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் 579 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி என்பவர் வைத்திருக்கும் சில நிறுவனங்களில் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான போது அவர் வைத்திருந்த பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் கூட புவனேஸ்வரி நிறுவனத்தின் பங்குகள் சரியவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து   கடந்த ஐந்து நாட்களில் மட்டும் நாரா புவனேஸ்வரி வைத்திருந்த பங்குகளின் நிகர மதிப்பு ரூபாய் 579 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் இன்னும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்