சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..! பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Senthil Velan

திங்கள், 10 ஜூன் 2024 (12:48 IST)
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும்  விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. 
 
இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
அமைச்சரவை முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகவும், அதேபோல் இந்த வருடத்திற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் ஆந்திர முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு  விடுத்திருந்தார்.

ALSO READ: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

அழைப்பை ஏற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்