கொடுத்த பில்டப் எல்லாம் யூஸ் இல்லாம போச்சே... திசை மாறிய வாயு புயல்!

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (11:59 IST)
20 வருடங்கள் கழித்து குஜராத்தை புயல் தாக்க இருப்பதாக கொடுத்த பில்டல் எல்லாம் வீணாகி வாயு புயல் குஜராத்தை தாக்காது என செய்தி வெளியாகியுள்ளது. 

 
அரபிக்கடலில் மையம் கொண்ட வாயு புயலானது இன்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 
 
அதோடு, 20 வருடங்களுக்கு முன்னால் குஜராத்தில் வீசிய புயலில் சுமார் 10,000 மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். சுமார் 165 கிமீ முதல் 195 கிமீ வேகம் வரை வீசிய புயலில் குஜராத் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது. கிட்டதட்ட அதே அளவு வேகத்திலேயே வாயு புயலும் இருக்கும் என்றெல்லாம் செய்தி வெளியானது. 
 
ஆனால், அதிதீவிர புயல் வாயு திசைமாறி குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குஜராத்தில் கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்