தற்போது புயலின் வேகம் மணி நேரத்திற்கு 150 கி.மீ முதல் 180கி.மீ வரை இருக்கிறது. இது கரையை கடக்கும்போது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஜூன் மாதத்தில் சரியாக 20 வருடங்களுக்கு முன்னால் குஜராத் ஒரு மிகப்பெரும் புயலை எதிர்கொண்டது. 1998ல் வீசிய அந்த புயலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். சுமார் 165கி.மீ முதல் 195 கி.மீ வேகம் வரை வீசிய புயலில் குஜராத் மிகப்பெரும் அழிவை சந்தித்தது. கிட்டதட்ட அதேஅளவு வேகத்திலேயே வீசப்போகும் இந்த புயலானது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நிர்ணயிக்க இயலாது.