’பிரதமர் மோடி’ குரலில் மிமிக்ரி செய்த நபர் கைது : பரபரப்பு தகவல்

ஞாயிறு, 2 ஜூன் 2019 (12:42 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிறந்தவர் அவ்தேஷ் துபே ஆவார். இவர் தனது சிறு வயதிலேயே குஜராத் மாநிலத்துக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தார்.
இவர் தற்பொழுது அவர் ஓடும் ரயிலில் பொம்மைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவ்ர் ரயிலில் பொருட்களை விற்பதற்காக அல்தேஷ் துபே,பிரதமர் மோடி,  அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி போன்றோரின் குரலில் பேசி வியாபாரம் செய்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சூரத் ரயில்வே பதுகாப்பு படையினரால் அவ்தேஷ் துபே திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். அவ்தேஷ் துபே அநாசியமான வார்த்தைகள்  எதையும் பேசவில்லை என்று தெரிகிறது.
 
ஆனால் பொதுவிடத்தில் ரயிலில் பயணிகளின் அமைதியை கெடுத்தல், சட்டவிரோதமாக ரயில் பெட்டிகளில் நுழைதல் ஆகிய விதிகளின் கீழ் அவ்தேஷ்துபே மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

 

"The Digital Seller"#ModiBhakt

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்