மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நீக்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அவரை வெளியேற்றினால் அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாகக்கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கூட்டத்தில், "மல்லை சத்யா வாழ்க!", "திராவிடம் வாழ்க!" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர், மதிமுக கொடியை தங்கள் காரிலிருந்து கழற்றி வீசியதாகவும், மதிமுக கொடி கம்பங்களிலிருந்து கொடிகளை அவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று மதிமுக உயிர்ப்புடன் இருப்பதற்கு மல்லை சத்யாதான் காரணம். ஆனால், தனது மகன் துரை வைகோவுக்காக உண்மையான விசுவாசிக்கு துரோகி பட்டத்தை வைகோ கொடுத்துவிட்டார்," என்று சத்யாவின் ஆதரவாளர்கள் வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், சத்யா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டால், தாங்கள் கூண்டோடு கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைய போவதாகவும் அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகள், மதிமுகவுக்குள் ஒரு பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகிறது. இதனால், மதிமுகவுக்கு முடிவு காலம் நெருங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் மதிமுகவில் மேலும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.