இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

vinoth
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (07:38 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக தனது வாழ்க்கையைத் தொடங்கியும் அவரால் அதை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியவில்லை. வினோத் காம்ப்ளியும் சச்சின் டெண்டுல்கரும் பள்ளி கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 வினோத் காம்ப்ளியின் கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது.

சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் சச்சினோடு கலந்துகொண்ட போது கூட அவரால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட புகைப்படம் இணையத்தில்  கவனம் பெற்றுள்ளது. இது சம்மந்தமாக வெளியாகியுள்ள தகவலில் “வினோத் காம்ப்ள்யேயின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் அவர் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது. அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்