இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

vinoth

வெள்ளி, 10 ஜனவரி 2025 (09:16 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இதனால் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட உள்ளது.

அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.

இந்நிலையில் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை அடைந்து வருகிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக தோனியை நியமிக்க பிசிசிஐ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்