இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் கேப்டன் கேபி அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பிரியா மிஸ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீப்தி சர்மா சாயாலி மற்றும் டைட்டஸ் சாது ஆகியோர்கள் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த நிலையில், 239 என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணியினர் விளையாடிய போது, தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக தேஜால் விளையாடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.