குடும்ப உறுப்பினர்களை வைத்து படம்… கவனம் ஈர்க்கும் ‘பயோஸ்கோப்’ அறிமுக வீடியோ!

vinoth

திங்கள், 23 டிசம்பர் 2024 (15:09 IST)
நடிகர் சத்யராஜை வைத்து வெங்காயம் என்ற படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் என்ற இளம் இயக்குனர், நெடும்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி அதை வெளியிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் இயக்கத்தில் அடுத்து ‘பயோஸ்கோப்’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். இந்த படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஒரு இயக்குனர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை வைத்து எப்படி படம் எடுக்கிறார் என்பதை சொல்லும் படமாக பயாஸ்கோப் இருக்கும் எனத் தெரிகிறது. படம் ஜனவரி 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்