ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

Siva

திங்கள், 23 டிசம்பர் 2024 (07:51 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்ற இந்திய அணி, நேற்று மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி உடன் முதலாவது ஒரு நாள் போட்டியில் மோதியது.

இந்த போட்டியில், இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்மிருதி மந்தனா மிக அபாரமாக பேட்டிங் செய்து 91 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து, 315 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டையும் ரன் ஏதும் இல்லாமல் இழந்தது. அதன் பின்னர், அடுத்தடுத்து விக்கெட் இழந்த நிலையில் 26.2 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே எடுத்ததால், மேற்கிந்திய தீவுகள் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் அணியின் ரேணுகா சிங் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து, ஆட்ட நாயகி விருதை பெற்றார்.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்